தமிழகத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதிக அளவு தக்காளி காய்ச்சல் பாதிப்பை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடை காலம் துவங்கிய நிலையில் இந்த தக்காளி காய்ச்சலானது அதிக அளவில் பரவ தொடங்கி இருப்பதாகவும் இதனால் வீட்டில் இருக்கக்கூடியவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த காய்ச்சலானது முதலில் தொண்டை வலியாக துவங்கிஅதனைத் தொடர்ந்து தீராத காய்ச்சல் மற்றும் கை, கால் பகுதிகளில் சிவப்பு நிற கொப்புளங்கள் என அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் துவங்கும் பொழுது கை மற்றும் கால் மூட்டு பகுதிகளில் அதிக அளவு வலி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பரவக்கூடிய காய்ச்சலிலிருந்து பொதுமக்கள் முக்கியமாக குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
தொற்று நோயாக இருக்கக்கூடிய தக்காளி காய்ச்சலானது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவு உடல் சோர்வை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். மேற்கூறியபடி இந்த காய்ச்சலில் ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக முக்கியமான ஒன்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.