இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்!! 8 தேதிக்குள் கையெழுத்தாகும் என தகவல்!! 

Trade agreement between India and the US!!

டெல்லி: டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவி ஏற்றதிலிருந்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இறக்குமதி வரியை அதிகரித்தார். சீனா உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 10 சதவீத வரி விதித்திருந்த நிலையில் கூடுதலாக 26 சதவீத வரியை அறிவித்தார்.
90 நாட்களுக்கு வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்த நிலையில் ஒன்பதாம் தேதியுடன் வரிவிதிப்பு காலக்கெடு முடிவடைகிறது. டிரம்ப் ஏற்கனவே காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அமெரிக்க மற்றும் இந்தியா கடந்த சில நாட்களாக கூடுதல் வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
 சமீபத்தில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். வரும் எட்டாம் தேதிக்குள் இந்திய மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பதாம் தேதி நிறைவடைய உள்ள கால அவகாசம் முடிவதற்கு முன்பே எட்டாம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கின்றன தகவல்கள். விவசாயம் மருந்து தொழிற்சாலைகள் சார்ந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் குறைக்க பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram