அமெரிக்க சீனா வர்த்தக ஒப்பந்தம்!! நடைபெறும் தேதியை அறிவித்தார் டிரம்ப் 

Trade Agreement!! Trump announced the date

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அடுத்தடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார்.  சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலடியாக சீனப் பொருட்களுக்கு அதிக வரியை வசூலிக்க தொடங்கினார் ட்ரம்ப். இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தொடங்கியது. அமெரிக்கா சீன பொருட்கள் அதிக வரி விதித்தது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது புதிய வரி விதிப்பை மூன்று மாதங்களுக்கு அதாவது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்த வர்த்தக பேச்சு வார்த்தையானது சுவிட்சர்லாந்தின் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூன் ஒன்பதாம் தேதி லண்டனில் சீனாவை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர், கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் ஆகியோர் லண்டனில் சீன பிரதிநிதிகள் உடன் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையானது மிக சிறப்பாக நடக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram