திருவண்ணாமலை: தண்டராம்பட்டில் இரண்டு பெண்கள் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை போக்ஸ் வழக்குகள், சிறு குழந்தைகள் பாலியல் தொல்லை என பல பாதுகாப்பற்ற சூழல் பரவி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மருமகளயே வரதட்சணை கொடுமைக்கு HIV ஊசி செலுத்தியுள்ளார் மாமியார். அடுத்தபடியாக தனது கணவர் நீண்ட நாள் நன்றாக இருக்க இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என ஜோசியம் கூறியதாக அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்துள்ளார் அந்த கொடூர மனைவி இவர்களுக்கு சமீபத்தில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
இத்தனை தொடர்ந்து திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு பகுதியில் வசிக்கும் பழனியம்மாள் என்ற பெண் வயது 47 இவருக்கு 18 தோழி இருகின்றாள். இருவரும் சேர்ந்து சிறுவர் மற்றும் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து அதை வைத்து மிரட்டியுள்ளனர்.
நகை பணம் வேண்டும் இல்லையேல் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அதை சம்பந்தப்பட்ட சிறுமியினுடைய சொந்த அக்காவுக்கு அனுப்பி வைக்க அது தாய் தந்தை சென்றடைந்தது. உடனே அவர்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.