ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரை அடுத்த பட்லூர், சொக்கநாத மணியூரை சேர்ந்த கூலி தொழிலாளி சேகரின் மகன் ஜெயசூர்யா குமார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார் ஜெயசூர்ய குமார்.
எப்போதும் போல் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கட்டுவிரியன் பாம்பு அவரை கடித்துள்ளது. முதலுதவி சிகிச்சைக்கு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பின் ஈரோடு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
கட்டுவிரியன் பாம்பின் விஷ வீரியம் அதிகமாக இருந்ததால் சுயநினைவை இழந்துள்ளார் ஜெயசூர்யா குமார். மேலும் உயிரிழக்கும் அபாயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விஷ முறிவு மருந்துகள் வழங்கி இரண்டு நாட்கள் வென்டிலேட்டரில் ஜெய சூரியகுமார் அனுமதிக்கப்பட்டார். Tragic death from a python bite!!
பத்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு ஜெய சூரியகுமார் முழுமையாக காப்பாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், “சூரியகுமார் உடம்பில் கட்டு விரியன் பாம்பு விஷம் அதிக வீரியத்துடன் இருந்ததால் கடுமையான வயிற்று வலி, பின் நரம்பு மண்டலம் பாதித்து சுயநினைவை இழந்த நிலையில் இருந்தார்.
பின் 20 பாட்டில் விஷம் முறிவு மருந்து அவருக்கு அளிக்கப்பட்டது. 72 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பின் இரண்டு நாட்கள் வென்டிலே வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்த பின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரியவந்தது. பத்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளார்” என்று கூறினார்கள் ஈரோடு அரசு மருத்துவர்கள்.