Pakistan: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் கிளர்ச்சி குழு ஒன்று ரயிலை கடத்தியது இதில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு கிளர்ச்சி குழு ரயிலை கடைசி உள்ளது. இதில் மொத்தமாக 30 ராணுவ வீரர்களை கொலை செய்ததாகவும் மேலும் ராணுவத்தில் இதற்கு பதிலடியாக கிளர்ச்சி குழு மீது பதில் தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்றதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 9 பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸை நேற்று சிலர் திடீரென அந்த ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டு விட்டு ரயிலை தளத்திலிருந்து விலக்கி உள்ளது.
மேலும் ரயிலில் இருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் வீரர்கள் மீது அந்த கிளர்ச்சி குழுவானது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. அதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 30 பேரை அவர்கள் கொண்டுள்ளதாக தீவிரவாத அமைப்பே கூறியுள்ளது. மேலும் அவர்கள் 200 க்கும் மேற்பட்ட பிணையக் கைதிகளை பிடித்து வைத்துள்ளதாக கூறியுள்ளது. அதை மீறி பாதுகாப்பு படை எங்களை நெருங்கினால் அவர்கள் அனைவரையும் நாங்கள் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளது.
இந்த தேர்ச்சி குழுவை தரைவழியாக எந்த ராணுவமும் நெருங்க முடியாத அளவிற்கு இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் மேலும் பாகிஸ்தான் வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது ட்ரோன் மூலம் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த ரயில் கடத்தல் சம்பவத்தில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பிடித்து வைத்திருந்த பழைய கைதிகளில் 80 பயணிகளை பாதுகாப்பு படையினர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.