ரயில்வே துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்டினரி ட்ரெயின் முதல் விரைவு டிரெயின்கள் வரை அனைத்தின் விலையும் கிலோமீட்டர் அடிப்படையில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இதன் விலைப்பட்டியலை மீண்டும் மாற்றி அமைப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான விதிமுறைகளை அறிவித்து இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ரயில்வே துறையில் இருந்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 617 ரயில்கள் நாள் கணக்கில் வார கணக்கில் மாத கணக்குகளில் இயக்கப்பட்டு வருகின்றன. வெகு தூர பயணம் என்றால் ஒன்று விமான பயணம் அதை தவிர்த்தால் ரயில் பயணம் தான் அனைவருக்கும் கம்ஃபோர்ட்டோ ஆக இருக்கும். இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு தான் ரயில்வே துறை தற்போது விரைவு ரயில்களில் 500 கிலோ மீட்டர் மேல் உள்ள பயணத்திற்கு மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 500 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பயணத்திற்கு கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் விரைவு ரயில்களில் 500 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பயணத்திற்கு கட்டண மாற்றமில்லை. 501 கிலோ மீட்டர் முதல் 1500 கிலோமீட்டர் வரை உள்ள விரைவு ரயில் பயணத்திற்கு ஐந்து ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1501 km முதல் 2500 km வரை நடப்பு டிக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2501 கிலோ மீட்டர் முதல் 3500 கிலோமீட்டர் வரை 15 ரூபாய் டிக்கெட் ரூபாயுடன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலும் ஸ்லீப்பர், ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் புக் செய்தால் ஒரு கிலோமீட்டருக்கு ஐந்து பைசா கூடுதலாக வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் ஏசி பிரிவுகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி முன்பதிவு கட்டணத்திலும், புறநகர் ரயில் கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம், சீசன் டிக்கெட் கட்டணத்திலும் மற்றும் பிற கட்டணங்களிலும் எந்த ஒரு மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே புக்கிங் செய்த டிக்கெட்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.