தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கைதான் மகாலட்சுமி. மேலும் இவருடன் தூத்துக்குடியில் உள்ள சாத்தானகுளத்தை சேர்ந்த சிவாஜிகணேசன் என்ற சைலு என்பவர் இரண்டு வாரமாக தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கதே மேலும் இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் மகாலட்சுமியின் வீட்டில் சிவாஜி கணேசன் என்ற சைலோ அலறும் சத்தம் கேட்டுள்ளது இதனால் மகாலட்சுமியும் சேர்ந்து அங்கு இருந்தவர்களும் பதறியபடி ஓடிப்போய் பார்த்துள்ளனர் அப்போது சைலோ அங்கு மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்து அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தீவிர விசாரணைக்கு பின் சைலு பெண்ணாக மாறுவதற்கு தான் தன்னுடைய உறுப்பை தானே அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டது இப்படியான விபரீதத்தில் போய் முடிந்திருக்கிறது. மேலும் அவ்வாறு மர்ம உறுப்பை அறுப்பதற்கு உடனிருந்த மகாலட்சுமியும் மற்றொரு திருநங்கை மதுமிதா என்பவரும் அடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அதீத ரத்தம் போன காரணத்தால் சைலோ இறந்ததாக கூறப்படுகிறது இதனால் அந்த திருநங்கைகள் மகாலட்சுமி மற்றும் மதுமிதா இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இந்த இருவரும் இதற்கு முன் பலருக்கு பெண்ணாக மாற மர்ம உறுப்பை இதுபோன்ற அறுத்து ஆபரேஷன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.