வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து தப்பிக்க முயன்ற போது மடக்கி பிடிக்க முயன்று உள்ளனர்.
நேற்று வேலூர் கோட்டை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு “கோழி கோபி” என்ற இளைஞர் தப்பி ஓட்டம் பிடித்தார். தப்பிக்க முயற்சித்த போது பொதுமக்கள் சிலர் மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்களிடம் இருந்து தப்பி வேலூர் கோட்டையின் நீர் தேங்கும் அகழியில் குதித்துள்ளார்.
முழங்கால் வரை தண்ணீர் இருந்தது தெரியாமல் அகழியில் குதித்துள்ளார் அந்த இளைஞர். பின் பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் இளைஞனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர்கள் ஆகியோருக்கு தகவல் கொடுத்து பின்னர் ஆழமில்லாத அகழியில் குதித்து விட்டு தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு துறை வீரர்கள் கயிற்றின் உதவியுடன் அவரை காப்பாற்றி பின் வழக்கு தொடர்ந்தது.
விசாரித்த போது கோழி என்கின்ற கோபி வேலூர் விருப்பாச்சி புரத்தை சேர்ந்தவர் . கோபியின் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது. அகழியில் பிடிபட்ட இளைஞரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சமீபமாக திருட்டு சம்பவம் அதிகரித்து வருகின்றன என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவம் குறித்து மக்களிடம் கேட்டபோது, வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகளிடம் திருட்டு மற்றும் வழிப்பறி அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை கோட்டையில் உள்ளே காவல் உதவி மையம் செயல் பட்டது. தற்போது காவல் உதவி மையம் செயல்பாட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், குற்ற சம்பவங்களை குறைக்கவும், மீண்டும் காவல் உதவி மையத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.