விருதுநகர்: சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்ட் ஆகி வரும் கூமாம்பட்டி கிராமம். கூமாம்பட்டி கிராமத்தை தற்போது சுற்றுலா பயணிகள் இணையதளத்தில் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கூமாம்பட்டி கிராமம் பற்றிய வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கூமாம்பட்டி கிராமம். குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிராமம் முழுவதும் பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும், மனதை கவரும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றன.
மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் இருந்தால் கூமம் பற்றி போன்ற தனி தீவாக காட்சியளிக்கும் கிராமத்திற்கு சென்று புணர்ச்சி பெற்று வரலாம் என சுற்றுலா பயணிகள் கூமாம்பட்டியை நோக்கி படையெடுக்கின்றன. கூமாம்பட்டி குறித்து ஒருவர் அளித்திருந்த வீடியோவின் படி தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்கள் போல் கூமாம்பட்டி மாறி வருகிறது. கூமம்பட்டி தனித்தீவு, தனி ஐஸ்லாந்து என்ற வார்த்தை விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய அடையாளமாக மாறிவிட்டது என நெட்டிசன்கள் கூறுகின்றன. வீடியோவை பார்த்து சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்றும் சிறிய ஒரு கிராமம் என்றும் பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.