பள்ளி வளாகத்தில் அத்துமீறல்!! மது அருந்திய கும்பல்!! ஆசிரியர் மீது பெட்ரோலை வீசிய சம்பவம்!! 

Trespassing in the school premises!!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி  ஆசிரியர் மீது பெட்ரோலை எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராக இருக்கிறார். வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் சென்று விட்டனர். சம்பவத்தன்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்தபின் ஐந்து மணி அளவில் பள்ளி வளாகத்திற்குள் 4 பேர் அத்திமில் மது அருந்தி கொண்டிருந்தனர் என கூறப்படுகிறது.
இதை பார்த்த முகமது குலாம் தஸ்தகீர் பள்ளி வளாகத்தில் மது அருந்துதல் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியரின் எச்சரிக்கையின் படி அங்கிருந்து நான்கு பெரும் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் பெட்ரோலை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். அருகே நின்று கொண்டிருந்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் மீது பெட்ரோலை ஊற்றி விட்டு ஓடி உள்ளனர்.
முகத்தில் பெட்ரோலை ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். முகத்தில் பெட்ரோல் பட்டதால் கண், மூக்கு, வாய் ஆகியவற்றில் எரிச்சல் காரணமாக அலறியுள்ளார் ஆசிரியர். அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆசிரியரை மீட்டு உள்ளனர். மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். புகாரின் அடிப்படையில் பெட்ரோல் வீசிய நான்கு பேரை கணியூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram