தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. துபாயில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவின் தென்னிந்திய சினிமாவில் 25 ஆண்டு கால பங்களிப்பை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விருது விழாவில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் சென்றன. அப்போது காணொளியில் பிரபலங்கள் புகைப்படங்களை காட்டி அவர்களுடைய கேள்விகள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. விஜய் குறித்து, உங்களது அரசியல் புதிய பயணத்திற்கு தனது வாழ்த்துக்கள். அவரது கனவுகள் நினைவாகட்டும். அதற்குரிய அனைத்து தகுதிகளுக்கும் உரியவர். என்று கூறியுள்ளார் திரிஷா.
அடுத்ததாக அஜித் குமாரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அதிலிருந்து அவரைப் பற்றி கவனித்தது, அவர் மிகவும் கனிவானவர் மட்டுமல்லாது அன்பானவரும் கூட. அவரது மனநிலை ஒருபோதும் மாறியது இல்லை. தன்னுடன் நடிப்பவர்கள் முதல் லைட் மேன் வரை அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்பவர். கருணை உள்ளம் கொண்டவர் என புகழ்ந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அதற்கு கமல் சார் எப்படி இப்படி இருக்கிறீர்கள்? எப்போதும் கவர்ச்சியாகவும், மிடுக்காகவும் இருக்க உங்களால் எப்படி முடிகிறது? இது போன்ற கேள்வியை தான் அனைவரும் கேட்க நினைக்கிறார்கள் என திரிஷா கூறியுள்ளார். விருது விழாவில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.