லண்டன்: அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி கொண்டே வருகிறார். அமெரிக்க அதிபர் ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றிருந்த போது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா ஆகியோர் சந்தித்து பேசினார்.
இஸ்ரேல் காசா மீது தொடர்ந்த தாக்குதல் நடத்தி வருவதால் காசாவில் நிலவும் உணவு பஞ்சத்தை போக்குமாறு அதில் அமெரிக்க முக்கிய பங்காற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர் என தகவல்கள் வெளியாகின. செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த போது இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் போன்ற ஆறு பெரிய தாக்குதல்களை நான் தீர்த்து வைத்துள்ளேன்.
மேலும் நான் தலையிடாவிட்டால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்திருக்காது. வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி விடுவேன் என எச்சரித்ததால் தான் போர் முடிவுக்கு வந்தது என கூறியுள்ளார் அதிபர் டிரம்ப். ஏற்கனவே நான் தன போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் என பெருமை பேசி வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் முடிவுக்கு கொண்டு வர வர்த்தக ஒப்பந்ததை குறித்து எச்சரித்தாள் தன போர் முடிவுக்கு வந்தது நான்தான் என பெருமை பேசி வந்தார். இது தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.