அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தொழிலாளிப்பராகவும் திகழும் நிலையில் புதிதாக கைபேசி நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சொந்தமாக பல வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் உலக அளவில் பிரபலம் வாய்ந்ததாக இருக்கிறது. டிரம்ப் தனக்கென ட்ரூத் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார்.
எலான் மஸ்க் உடன் ஏற்பட்ட மோதலால் எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளார். டெலிகாம் சர்வீஸ் என்ற தொலைத்தொடர்பு துறையில் கைபேசி நிறுவனம் தொடங்குவதற்கான திட்டமிடல் மற்றும் சம்பந்தப்பட்ட காப்புரிமையை அதற்கான அலுவலகத்தில் விண்ணப்ப விண்ணப்பித்திருக்கிறார்.
நிறுவனத்தை தொடங்கி டெலிகாம் நெட்வொர்க் அறிமுகப்படுத்த உள்ளார் டொனால்டு டிரம்ப். ஜூன் 12ம் தேதி காப்புரிமை விண்ணப்பத்தை கைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு டிரம்ப் மற்றும் டி-1 என்ற பெயரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காப்புரிமை கிடைக்கும் பட்சத்தில் பேட்டரி சார்ஜர், வயரில்லாத டெலிபோன் சேவைகளை தொடங்க உள்ளார் ட்ரம்ப். கைபேசி தயாரிக்க விண்ணப்பிப்பதற்கான தகவலை அதிகாரப்பூர்வமாக காப்புரிமை அட்டர்னி ஜோஸ் கெர்பன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதிபராக பதவியேற்றதிலிருந்து அரசியல் செல்வாக்கை உயர்ந்து வருகிறாரோ இல்லையோ தனது செல்வாக உயர்த்துவதில் தனி கவனம் செலுத்தி வருவதாக கருத்துக்கள் நிலவி வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து ஜூன் 13ஆம் தேதி வரை காப்புரிமையை கோரி 27 விண்ணப்பங்களை விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.