அமெரிக்காவின் பாதுகாப்பில் ஓட்டை?? கிரீன்லாந்து ஏவுகணை கவசத்திற்கு கனடா ‘நோ’!! ட்ரூத் சோஷியலில் கொதித்த டிரம்ப்!!

Trump, Canada, Golden Dome, Greenland, Mark Carney.

வாஷிங்டன் (ஜனவரி 24, 2026): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கனவுத் திட்டமான ‘கோல்டன் டோம்’ (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கிரீன்லாந்தில் அமைக்கத் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், அண்டை நாடான கனடா இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவது இரு நாடுகளிடையே பெரும் ராஜதந்திரப் போரை உருவாக்கியுள்ளது.

என்ன இந்த கோல்டன் டோம்?: இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ (Iron Dome) போல, வட அமெரிக்கா முழுவதையும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வான்வெளியில் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதே இந்தத் திட்டம். சுமார் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு கிரீன்லாந்தின் அமைவிடம் மிகவும் முக்கியமானது.

கனடாவின் எதிர்ப்பு ஏன்?: கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது.

“இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் செயல்” என கனடா கருதுகிறது.

மேலும், ஐநாவுக்கான கனடா தூதர் பாப் ரே, இந்தத் திட்டத்தை ஒரு “பாதுகாப்பு மிரட்டல்” (Protection Racket) என விமர்சித்துள்ளார்.

டிரம்பின் ‘பஞ்ச்’ விமர்சனம்: இந்த எதிர்ப்பால் ஆத்திரமடைந்த டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

கனடாவையும் சேர்த்துதான் இந்த கோல்டன் டோம் பாதுகாக்கும். ஆனால், அவர்கள் சீனாவோடு வர்த்தகம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இப்படிச் செய்தால் ஒரே வருடத்தில் சீனா உங்களை (கனடாவை) விழுங்கிவிடும் (Eat them up)!

பின்னணி – சீனா கனடா டீல்: சமீபத்தில் கனடா பிரதமர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு பெரும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தார். அமெரிக்கா சீனப் பொருட்கள் மீது வரிகள் விதிக்கும் வேளையில், கனடா சீனாவுடன் நெருக்கமாவது டிரம்பை எரிச்சலடையச் செய்துள்ளது. “அமெரிக்கா கொடுக்கும் பாதுகாப்பில் இலவசமாக வாழும் கனடா, எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்” என டாவோஸ் (Davos) கூட்டத்திலும் டிரம்ப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram