சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தனர். அது பெரும் சர்ச்சையாக மாறியது. ட்ரம்ப் கொடுத்த நெருக்கடிக்கு ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து ரஷ்யா உடனான போருக்கு அமெரிக்க எந்த உதவியும் செய்யாது என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அப்போது ஜெலன்ஸ்கியிடம் இதுவரை உக்ரைனுக்கு செய்த உதவிக்கு ஈடாக அந்நாட்டின் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
என்னதான் உதவி செய்தாலும் அந்நாட்டின் கனிம வளத்தை எந்த நாடாக இருந்தாலும் தர மறுத்திருக்கும். அதுபோல் தான் உக்ரைனும் தர மறுத்துள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவின் சார்பில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதனைத் தொடர்ந்து இப்பொழுது மிகப் பெரும் அடியாக, செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்கா தர மறுத்து உள்ளது. இதை வைத்து தான் ரஷ்யா எங்கிருந்து தாக்குகிறார்கள் என்று உக்ரைனால் யூகிக்க முடியும். இந்த ட்ரம்பின் செயல்பாட்டினால், உக்ரைனுக்கு பெரும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், ரஷ்யா கூட சமாதான பேச்சுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றது. ஆனால், உக்ரைன் தான் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது என்று இந்தக் குறுகிய கால செயற்கைக்கோள் புகைப்பட பகிர்தலை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் ஜெலன்ஸ்கி தனது நாட்டைக் காப்பாற்ற என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்று பல நாடுகளும் அவர்களை கவனித்து வருகின்றன.