வாஷிங்டன் (ஜனவரி 24, 2026): மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நோக்கி அமெரிக்காவின் பிரம்மாண்டமான கடற்படைக் கப்பல்கள் (US Navy Strike Group) விரைந்து கொண்டிருக்கின்றன. இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு ராஜதந்திரமான மிரட்டலை விடுத்துள்ளார்.
டிரம்பின் எச்சரிக்கை என்ன?: “ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் எங்களது பலம் வாய்ந்த கடற்படையை நான் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன். அமைதியான முறையில் விஷயங்கள் சுமுகமாக முடியும் என நினைக்கிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவர்களுக்குப் ‘புரியும்னு நினைக்கிறேன்’” என டிரம்ப் தெரிவித்துள்ளார்
ஏன் இந்த நகர்வு?: சமீபத்தில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், தனது நட்பு நாடான இஸ்ரேலைப் பாதுகாக்கவும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஒரு கண் வைக்கவும் அமெரிக்கா இந்தப் படைகளை அனுப்பியுள்ளது.
மறைமுக மிரட்டல்: ‘பயன்படுத்த வேண்டிய அவசியம் வராது’ என்று டிரம்ப் சொன்னாலும், ஈரான் தனது போக்கைத் தற்போதே மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்பதையே அவர் மறைமுகமாகச் சொல்கிறார்.
டிரம்பின் டீல்: ஏற்கனவே ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பேன் என மிரட்டி வரும் டிரம்ப், இப்போது ராணுவ ரீதியாகவும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
உலக நாடுகளின் பார்வை: டிரம்பின் இந்தப் பேச்சுக்குப் பிறகு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஈரானின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.


