ஜப்பான்: ஜப்பானிய பாபா வங்கா ரையோ தத்சுகி என்ற தீர்க்கதரிசியின் கணிப்புகள் படி 24 மணி நேரத்தில் ஜப்பான் சுனாமி பேரழிவை சந்திக்கும் என கூறியுள்ளார். தத்சுகி கூறிய கணிப்புகள் நடந்து விடுமா அல்லது மக்கள் தப்பித்துக் கொள்வார்களா என பரபரப்பாக பரவி வருகிறது. எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகளில் ஒருவர் பாபா வங்கா உள்ளார்.
பல்கேரியாவை சேர்ந்த இவர் 1996 இல் தனது 85 வது வயதில் மரணமடைந்தார். அதன் பிறகு அவரின் கணிப்புகள் அப்படியே நடந்ததாக கூறுகின்றனர். இவர் நவீன பாபா வங்கா என்றும் அழைக்கின்றனர். ஜூலை 5, 2025 ஆம் நாளின் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பேரழிவு ஏற்படும் என ரையோ தத்சுகி கணித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட தோஹோகு
நிலநடுக்க பாதிப்புகளை காட்டிலும் பயங்கரமாக இருக்கும் எனவும் பிரம்மாண்ட சுனாமிகள் தாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணிப்புகளானது தற்போது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலர் ஜப்பானிற்கு செல்வதற்கு பதிலாக வேறு இடங்களுக்கு பயண திட்டத்தை அமைத்து சென்றுள்ளனர்.
நவீன பாபா வங்கா ரையோ தத்சுகி “தி ஃபியூச்சர் வாட் ஐ சா” ( the future what i saw ) என்ற புத்தகத்தை எழுதியது பல்வேறு நிகழ்வுகள் கண்முன்னே நடந்ததாக கூறப்படுகிறது. நீருக்கு அடியில் நிலவு நடுக்கம் ஏற்படுவது தொடங்கி எரிமலை வெடிப்புகள் வரை பல நிகழ்வுகள் நடந்ததாக கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்படும் என சுகி கணித்திருந்தார்.
இது சர்வதேச அளவில் அறியப்படும் நபராக மாற்றியது என கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றும் அவர் கணிப்பில் ஒன்று. மேலும் வைரஸ் சர்வதேச அளவில் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என அவர் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 2020 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பல பேரை காவு வாங்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
குறிப்பாக பிரபல பாடகர் ஆன பிரட்டி மெர்குரியின் இறப்பதாக கனவில் கண்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். பெரும்பாலான இவரது கணிப்புகள் ஜப்பான் நாட்டை கவனிக்கத்தக்கதாக மாற்றியுள்ளது. இந்நிலையில் ராயோ தக்சுகியின் சுனாமி கணிப்பு பலிக்குமா? என்று மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.