போக்சோ வழக்கில் திருப்பம்!! 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து!! பின்னணி என்ன??

கோவை மாணவி மற்றும் இளைஞர் காதல் விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் கவனம் பெறுகிறது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்திருந்த மாணவி, பெற்றோர் விருப்பமின்றி காதலனுடன் சென்றதால், கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டுகள் மூலம் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காதலியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு மதன்குமாருக்கு 20 ஆண்டு கடும் சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மதன்குமாரின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும் நிலையில் இருந்தது. அவரது தரப்பில், “பெண் சம்பவத்தின்போது 18 வயதை கடந்தவர், இருவரும் ஒருமித்த உடன்பாட்டில் காதலுறவில் ஈடுபட்டனர், பெற்றோர், பெண்ணுக்கு 40 வயது உடைய உறவினருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால் காதலி காதலனுடன் வீட்டை விட்டு சென்றார்” என வாதமிட்டனர்.

இந்த மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி “கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி 18 வயதுக்கு கீழ் இருப்பது சாத்தியம் இல்லை. பாதிக்கப்பட்டவர் சிறுமி என சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை” என தெளிவுபடுத்தினார். இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத்தண்டனை முற்றிலுமாக ரத்து செய்து மதன்குமாருக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பல காதல் ஜோடிகளுக்கு நம்பிக்கையையும் நீதிமன்றத்தின் நேர்மையான பார்வையையும் எடுத்துக் காட்டுகிறது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதலர்கள் சட்டத்தின் கடுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை இனி குறையுமா என்பது சமூகத்தில் பரவலான கேள்வியாக எழுந்துள்ளது. இவ்வாறு ஒரு சாதாரண காதல் விவகாரம், போக்சோ சட்டத்தின் கடுமையை சந்தித்ததன் பின்னணி, இளைஞர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் மனச்சோர்வுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram