Tvk: மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது அங்கு உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. அங்கு அதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார்.
இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்தும் 2500 அல்லது அதற்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த துவக்க விழாவில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் அந்த விடுதியில் 2000 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கும் மேற்பட்ட பாஸ்களை வழங்கியதால் அங்கு உள்ளே அமரும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனால் அங்கு பலரும் நின்று கொண்டு விழாவை காணும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அவரும் இருக்கைகள் என்னவோ 2000 தான் ஆனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஸ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பாஸ்களை கொண்டு வரும் மாவட்ட நிர்வாகிகள் கூட உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் தலைவர் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.