தவெக புஷி ஆனந்துக்கும், மாவட்ட பொறுப்பாளர் அஜிதாவுக்குமான மோதல்!! அதிருப்தி அடைந்த தொண்டர்கள்!!

தவெக கட்சி தொடங்கிய முதல் கட்சி மாநாட்டிலேயே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதா பதவி வைத்துள்ளார். இவரது அண்ணன் ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்த போதிலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளார். ஆனால் இவர் தற்சமயமும் தவெகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

ஆரம்பம் முதலே இவருக்கும், தலைமை பொறுப்பாளர் புஷி ஆனந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.  தொடர்ந்து நடத்தப்பட்ட கட்சி டிஸ்கஷன்களுக்கும், இரண்டாவது மாநாட்டிற்கும் இவருக்கு அழைப்பு சென்றடையவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட மாணவ மாணவியரை அழைத்து வரும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர் அழைத்து வந்த நிலையில், இவருக்கு எதிராக போட்டியிடும் நபர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டதால் இவர் கடும் கோபத்திற்கு ஆளானார். இவர் நுழைவு சீட்டு தங்களுக்கு தந்தால்தான் மாணவர்களை அழைத்து வருவேன் என்று சொன்ன பிறகே இவருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர் அழைத்தும் வந்த மாணவ, மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் இதனால் ஒரு மணி நேரம் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் வந்த மாணவர்களை நுழைவுச்சீட்டு இல்லாமல் ஒரு ரஃப் தாளில் தான் நோட் செய்து உள்ளே அனுப்பி உள்ளனர். நிகழ்ச்சி மேடையிலும் அஜிதா வந்த போது நேரலை துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அதித்தி அடைந்த தொண்டர்கள் கேள்வி எழுப்ப, அவர் கட்சி பெயரை சொல்லி அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டுமல்லாது பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். மேலும் அவரது அண்ணனின் பெயரைச் சொல்லி பலரை மிரட்டி வந்துள்ளதால் கட்சி தலைமையகம் அவரை கண்டுகொள்ளவில்லை என்று பதிலளித்துள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram