கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கு தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் இன்னைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழல்ல நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்க எல்லாருமே நல்லா புரிஞ்சு வெச்சுட்டு இருக்கீங்க நான் நம்புறேன். அரசியல் என்றால் என்னங்க ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும்னு நினைக்கிற அரசியலா இல்ல ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டு சுரண்டி நல்லா வாழனும்னு நினைக்கிறது அரசியலா?
ஆட்சிக்கு திராவிட மாடல் மக்கள் பிரச்சனைகளை மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போன்று நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ற செயல்கள் ஒன்று இரண்டு அல்ல மாநாட்டில் ஆரம்பிச்சதுங்க மாநாட்டில் ஆரம்பிச்சுகிட்டு அந்த புத்தக வெளியீட்டு விழா வரைக்கும் எங்கெல்லாம் எப்படி எல்லாம் தடைகள்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே பேர மட்டும் வீரப்பன் சொன்ன பத்தாது அவர்களே காட்டணும் அவர்களே ஒன்றியத்தில் பாஜக ஆட்சிய ஒரு பாசிச ஆட்சியின் அடிக்கடி அறிகுறித்துவிட்டு இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவா அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தானே ஒரு கட்சித் தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழகத் தோழர்களையும் எந்நாட்டு மக்களையும் பாக்குறதுக்கோ தடை போடறதுக்கு நீங்க யாருங்க.
தடை மீறிய மக்கள பாக்கணும்னு முடிவு பண்ணிட்டானா போயே தீருவேன் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அமைதியாக இருக்கிறேன். நேத்து வந்தவெல்லாம் முதலமைச்சரான்னு சொல்றீங்க அப்புறம் ஏங்க எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தமிழக வெற்றி கழகத்துக்கு மட்டும் குடுக்குறீங்க? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் விஜய்.