இன்று திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுகுழு கூட்டத்தில் பேசிய தலைவர் விஜய், மாண்புமிகு மோடிஜி அவர்களே என்னமோ உங்கள் பெயரை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு பயம் போல சொல்லுகிறீர்கள். ஏன் ஜி தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜி எஸ் டி வாங்கிக் கொள்கிறீர்கள் ஆனால் பட்ஜெட் நிதி கொடுக்க மாட்டீர்கள் இங்கு உங்கள் பிள்ளைகளுக்கு நிதி தராமல் கொள்கையை திணிக்கிறீர்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தலில் நீங்க சொன்ன போதே புரிந்து விட்டது பிரதமர் சார். உங்களிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான் தமிழ்நாட்டை கேர் ஃபுல்லா கையாளுங்க ஏனென்றால் இது பல பேருக்கு தண்ணி காட்டிய மாநிலம் பார்த்து செய்யுங்க சார். இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் சந்திக்கும் 2026 இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி TVK மற்றொன்று DMK.
மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி செய்கிறார்கள், ஒவ்வொரு குடும்பம் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்று நன்றாக செய்கிறார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே பெயர் மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது செயலிலும் காட்ட வேண்டும்.
அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் காற்றை தடுக்க முடியாது மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக சக்தி மிக்க புயலாக மாறும். பெண்களுக்கு நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியவில்லை சார் இதுல உங்கள அப்பான்னு சொல்றோம்னு வேற சொல்றீங்க உங்க கொடுமைகளை அனுபவிக்கும் என் சகோதரிகள்தான் உங்க அரசியலுக்கும் ஆட்சிக்கும் முடிவு கட்டப் போகிறார்கள். என்று பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சரமாரியாக பேசியுள்ளார்.