இங்க நீங்க தான் இப்படின்னா அங்க அவங்க யாரு உங்க சீக்ரெட் ஓனர் அவங்க உங்களுக்கும் மேல மாண்புமிகு திரு மோடிஜி அவர்களே என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பயம் மாதிரியும் அப்படி ஒரு விஷயத்தை சொல்லி அப்புறம் என்ன பேரை சொல்லி எனக்கு புரியலையே ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி கொள்ளையடிப்பதற்காக உங்களோட அதாவது பாஜகவோட மறைமுக அரசியல் கூட்டணி இப்படி உங்க பேரை சொல்லி மக்களை ஏமாத்தறது உங்க பேரை சொல்லி பாக்கல பயன்படுத்துறோம்.
மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜிஎஸ்டியை கரெக்டா வாங்கிக்கிறீங்க ஆனா தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க மாட்டேங்கிறீங்க சார் உங்க பிளான் என்னன்னு எங்கெல்லாம் எப்படி எல்லாம் எந்த திசைகள் எல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்னு. தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க சார் தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டின ஸ்டேட் சார்.
நம்ம ஆட்சி அதாவது உங்க ஆட்சி உண்மையான மக்களாட்சி தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அருவி பெரும்பான்மை பெற்ற ஆட்சி அதே சமயத்தில் அதிகார பகிருடன் கூடிய ஆட்சி அப்படி இந்த ஆட்சி அமைஞ்சதும் பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்வோம் சட்டம் ஒழுங்கு ரொம்ப முறையா ஸ்ட்ரிக்டா வச்சிருப்போம் கல்வி சுகாதார மருத்துவம்னு அத்தனையும் ரொம்பவே கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி செய்வதுதான் நம் டார்கெட்டு.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் மின்சார வாரிய ஊழியர்கள் தொழிலாளர்கள் பக்கமும் நாம கண்டிப்பா துணையாக நிற்போம் என நாம எப்பவுமே உழைக்கிறவங்க பக்கம் தான் நம்ம தமிழ்நாடு விவசாய பூமி இயற்கை வளங்கள் நிறைந்த மண் விவசாயத்துக்கும் இயற்கை வளங்களுக்கும் எதிரா எந்தவிதமான ஒரு திட்டத்தையும் நடவடிக்கை கொண்டு வருவது எங்களால் ஏற்கவே முடியாது எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை கடமை கொள்கை.
இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026 இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்புகிற ஒரு நல்ல அரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால் காற்று மழை வெயில் இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும் அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது அரசியல் சூறாவளியையும் தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர் அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.