தளபதியின் அடுத்த மூவ் இதுதானா?? NDA பக்கம் சாய்கிறாரா விஜய்?? தமிழக அரசியலில் மெகா கூட்டணி??

tvk-party-meeting-nda-alliance-discussion-vijay-political-move-tn-election-2026

தமிழக அரசியலில் மிகக்குறுகிய காலத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் சென்னையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கியமான கூட்டத்தில், மொத்தமுள்ள 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான விவாதமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்களில் சுமார் 98 பேர், அதாவது 80 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள், NDA கூட்டணியில் இணைவதே கட்சியின் எதிர்காலத்திற்கு மற்றும் தேர்தல் வெற்றிகளுக்குச் சாதகமாக இருக்கும் என ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில் ஒரு வலுவான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திப்பது, வாக்குகளைச் சிதறவிடாமல் இருக்க உதவும் என அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இறுதி முடிவை கட்சியின் தலைவர் விஜய் தான் எடுப்பார் என்பதால், மாவட்ட செயலாளர்களின் இந்த விருப்பம் அவரிடம் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனிப்பாதையில் பயணிப்பதாக அறிவித்திருந்த தவெக, தற்போது தேசியக் கூட்டணியை நோக்கித் திரும்புவது தமிழக தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக-விற்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்க இது அடித்தளமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram