தமிழக வெற்றி கழகம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புதிதாக எதிர் நோக்குவதை அடுத்து தொடர்ந்து அந்த கட்சியில் பல யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை குறித்த அடுத்தடுத்த கெடுபிடிகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கட்சி தொடங்கப்பட்டபோது வந்த மார்ச் மாதமே கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று இருந்தது. அதில் கிட்டத்தட்ட ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனை அடுத்து மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது, பொதுக்கூட்டம் ஆகியவற்றை கட்சி தலைமை செய்து வந்திருந்தது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக உறுப்பினர் சேர்க்கை வருகின்ற தேர்தலை ஒட்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமய கணக்குபடி இன்னும் ஒரு கோடி பேர் உறுப்பினர்களுக்கு தேவை உள்ளது. இதற்காக பிரத்தியேகமாக கட்சிக்கென தனி ஆப்பே தயார் செய்து கட்சி தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு இது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி சென்னை தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களிடம் பொதுச் செயலாளர் புஷ்ஷி ஆனந்த் நீங்கள் யார் கை கால்களில் விழுந்து கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பீர்களோ! தெரியாது? கட்சிக்கு கட்டாயமாக ஒரு கோடி கூடுதல் உறுப்பினர்கள் தேவை உள்ளது. அதையும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் பயிற்சி எடுத்த மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சியில் வீடு திரும்பி உள்ளனர்.




