சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்ச
கூட்டணி குறித்துக் காரசாரமாகப் பேசினார். குறிப்பாக, இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியின் பயணத்தையும், மதுரை எய்ம்ஸ் விவகாரத்தையும் முன்வைத்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.
சீசன் விசிட்: “தேர்தல் இல்லை என்றால் தமிழகத்தை எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி, தேர்தல் வந்துவிட்டால் மட்டும் 10 முறை தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் வருவார். இப்போதும் தேர்தல் நெருங்குவதால் மதுராந்தகம் வந்திருக்கிறார்.”
மதுரை எய்ம்ஸ் எங்கே?: “8 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று இப்போது பிரதமரோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அவரிடம் கேட்க வேண்டும். ஒரு மருத்துவமனையை எட்டு வருஷமாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சாதனையா?”
செங்கல் அரசியல்: “அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. ஆனால் மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டார்கள். எத்தனை முறை பிரதமர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்காகத்தான் வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
அரசியல் அனல்: பிரதமர் மோடி மதுராந்தகத்தில் அதிமுக – பாஜக கூட்டணித் தலைவர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில், உதயநிதி சட்டப்பேரவையில் இந்தக் கேள்விகளை எழுப்பியிருப்பது திட்டமிட்ட அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. திமுக தனது பிரச்சாரத்தில் மீண்டும் ‘எய்ம்ஸ் செங்கல்’ மற்றும் ‘மத்திய அரசு நிதிப் பகிர்வு’ விவகாரங்களை வலுவாகக் கையில் எடுக்கும் என்பதை இந்தப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.


