இங்கிலாந்து நாட்டின் பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு நாட்டிற்கு இன்று சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி முதல் நாடாக கடந்த 23ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்திய கொடிகள் மற்றும் நரேந்திர மோடியின் புகைப்படம் பதித்த பலகைகளை கையில் ஏந்தி எப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார் நரேந்திர மோடி.
இரு பிரதமர்களின் சந்திப்பின்போது இரு நாடுகளின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் குறிப்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்து பேசினார் மோடி. இரண்டு நாட்கள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மாலத்தீவு நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பேச உள்ளார்.
மேலும், மாலத்தீவு நாட்டின் 60 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க உள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பின் மாலத்தீவு பயணத்தை நிறைவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து சுற்றுப்பயணங்களை நிறைவு செய்து நாளை மாலை பிரதமர் மோடி இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.