Cricket: இந்தியாவின் சிறந்த லீக் போட்டிகளில் முதன்மை வாய்ந்த ஐபிஎல் போட்டியின் முறியடிக்க முடியாத சாதனைகளை பார்ப்போம்.
இந்தியா மட்டுமல்ல உலக அளவில் மிகவும் தனித்துவம் வாய்ந்த மற்றும் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படும் லீக் போட்டி ஐபிஎல் தொடர். இந்த வருடத்திற்கான ஐபிஎல் மார்ச் 22 தொடங்க உள்ளது. இந்நிலையில் இதுவரை உள்ள முறியடிக்க முடியாத சாதனைகளை பற்றி பார்ப்போம்.
ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி உள்ளார். இதுவரை 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி, 6769 ரன்கள் அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மா இவர் 257 போட்டிகளில் விளையாடி 6628 ரன்கள் அடித்துள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 160 போட்டியில் விளையாடி 205 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் பியூஷ் சாவ்லா இவர் 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றாவது இடத்தில் பிராவோ இவர் 161 போட்டியில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிக சிக்ஸ் அடித்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் கிறிஸ் கெயில் அவர் 142 போட்டியில் விளையாடி 357 சிக்சர்கள் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 257 போட்டிகளில் விளையாடி 280 சிக்சர்கள் அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் விராட் கோலி 252 போட்டிகளில் விளையாடி 272 சிக்சர்கள் அடித்துள்ளார்.
தனிப்பட்ட வீரர்கள் அதிக ரன் விளாசிய பட்டியலில் முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் 175 ரன்கள் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரண்டன் மெக்கலம் இவர் 158 ரன்கள் அடித்துள்ளார், மூன்றாவது இடத்தில் டீ காக் இவர் 140 ரன்கள் அடித்துள்ளார். நான்காவது இடத்தில் டி வில்லியர்ஸ் இவர் 133 ரன்கள் அடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுல் இவர் 132 ரன்கள் அடித்துள்ளார்.
இதுவரை அதிக போட்டிகளில் விளையாடும் வீரர்கள் முதலிடத்தில் எம் எஸ் தோனி 2064 போட்டிகளில் விளையாடி உள்ளார். இரண்டாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் 257 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மா 257 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
அதிக ரன்கள் விளாசிய அணி என்ற சாதனை பட்டியலில் முதலில் சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் ஆர் சி பி அணிக்கு எதிராக அடித்தது. இரண்டாவது இடத்தில் மீண்டும் சன்ரைசர்ஸ் அணி மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்தது. மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிராக 272 ரன்கள் அடித்தது. இந்த அதிகபட்ச ரன்கள் அனைத்தும் கடந்த ஆண்டு 2024 அடிக்கப்பட்டது.
இதில் எந்தெந்த சாதனைகளை முறியடிக்க முடியும் அதை யார் முறியடிப்பார் என்பதை பதிவிடுக??