கனமழையால் ஆறுகளாக காட்சி அளித்த சாலைகள்!! சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்!!

Unprecedented floods in China!!
வரலாறு காணாத அளவிற்கு சீனாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது ஆறுகளாக காட்சியளிக்கின்றன சாலைகள். தெற்கு மற்றும் மத்திய சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. மக்களின் வீடுகள் தீவுகளாக காட்சியளிக்கின்றது. சில இடங்களில் வெள்ள நீரானது முதல் மாடி வரை அதிகரித்துள்ளது. நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சுய்ஜியாங் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹீவைஜி மாநகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்கி உள்ளனர். சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலம் பார்த்ததில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரிய பெரிய மரங்கள் மட்டுமே காட்சி அளித்தனர்.
பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி காணப்பட்டது. கடந்த வாரத்தில் குவாங்சி மாகாணத்தில் WUTIP புயல் தாக்கியது. கனமழையால் வரும் நாட்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், குவாங்சி, ஹுனான், ஹுபெய், ஹெனான், குயிச்சோ மற்றும் அன்ஹீய் போன்ற ஆறு மாகாணங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
1998 சீனாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய பொருளாதார மண்டலங்கள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் ஆபத்தில் உள்ளது. வெள்ளத்தில் சாலைகள் ஆறுகளாக மாறி காட்சியளிக்கிறது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram