டாக்டர் கனவு சிதைந்த உடல்!! மாற்றுத்திறனாளி கோட்டாவைப் பெற முயற்சி!! விரல்களை வெட்டிய மாணவன்!!

up-neet-aspirant-cuts-his-own-toes-for-mbbs-seat-quota-investigation-reveals

உத்திரப்பிரதேசம் (ஜனவரி 24, 2026): உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் பாஸ்கர் என்ற இளைஞர், நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் சேர வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருந்து வந்தார். பலமுறை முயற்சித்தும் சீட் கிடைக்காததால், ஒரு விபரீதமான திட்டத்தைத் தீட்டினார்.

ஏன் இந்த முடிவு?: பொதுப் பிரிவில் சீட் கிடைப்பது கடினம் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டின் (PWD Quota) கீழ் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.

பகீர் செயல்: இதற்காகத் தனக்குத் தானே மயக்க மருந்தை உடலில் செலுத்திக் கொண்ட சூரஜ், கூர்மையான ஆயுதத்தால் தனது கால் விரல்களைத் துண்டித்துக் கொண்டார்.

திசைதிருப்பிய சூரஜ்: பின்னர், அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தாக்கி விரல்களைத் துண்டித்துவிட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் அம்பலமான உண்மை: வழக்கை விசாரித்த காவல்துறைக்குச் சூரஜின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் தெரிந்தன. சம்பவ இடத்தில் போராட்டத்திற்கான எந்தத் தடயமும் இல்லை. இறுதியில் தீவிர விசாரணையில், டாக்டர் சீட்டுக்காகத் தானே தனது விரல்களை வெட்டிக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram