புது டெல்லி: பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே பிரச்சனை அமெரிக்காவின் மூன்றாம் நாடு பேசி தீர்க்க இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்டரி, பிரதமர் மோடி மற்றும் அதிபர் தொலைபேசியில் பேசிய வீடியோவை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில் கூறியது, பிரதமர் மோடி மற்றும் அதிபர் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தான் இடையேயான மத்தியஸ்தம் ஆகியவை குறித்தும், அமெரிக்கா எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று டிரம்பிடம் மோடி தெளிவாக கூறியுள்ளார்.
ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம் செய்வது குறித்த பேச்சு வார்த்தைகள் மற்றும் சம்பந்தப்பட்ட இரு ராணுவங்களுக்கும் இடையேயான வழிமுறைகள் ஆகியவற்றின் கீழ் இந்தியா நேரடியாக செயல்படுத்தப்பட்டது. இந்தியா ஒருபோதும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ளாது. இப்போது மட்டுமல்ல, அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு திட்டமிட்டு இருந்தது. அமெரிக்காவுக்கு ட்ரம்ப் திரும்ப வேண்டிய நிலையில் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் உரையாற்றினர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்பட்ட பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போராட்டத்தின் ஆதரவு ஆகியவற்றை தெரிவித்துள்ளார். கனடாவில் இருந்து நாடு திரும்புவதற்கு முன் அமெரிக்காவுக்கு வந்து செல்ல வேண்டும் என்று டிரம்ப் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளின் காரணமாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று மோடி நிராகரித்தது ஆகியவை பற்றி போனில் பேசியுள்ளார்கள்.