அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் அமெரிக்காவை பொருளாதாரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறேன் என வாக்குறுதி அளித்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் இன்று நிலைமை மிகவும் தலைகீழானதாக மாறி உள்ளது. பொருளாதாரத்தின் உச்சிக்கு செல்வதற்கு பதிலாக பொருளாதாரமானது மந்தநிலையை அடைந்து கொண்டிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப அவர்கள் துவங்கி வைத்த வர்த்தக போரால் உலக நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் இருக்கின்றன. அப்படியாகப்பட்ட ஒரு முக்கிய பிரச்சனை தான் தங்கத்தின் விலை உயர்வு நாளுக்கு நாள் எதிர்பாராத அளவு உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை ஆனது கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சரிவை சந்தித்து இருப்பது மக்களை மகிழ்ச்சி படுத்தி உள்ளது.
தங்கத்தின் திடீர் விலை மாற்றங்களை தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை மாற்றங்களும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கச்சா எண்ணெயின் விலையானது மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில் விலை குறைந்த கச்சா எண்ணெய் ஆனது மீண்டும் அதே அளவு சரிவை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்டாக்ஸ் மாகாணத்தில் இந்த வாரம் இதுவரை 3% வரை கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த வாரம் 6% வரை விலையில் சரிவு ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் தற்பொழுது 58.79 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தாலும் இந்தியாவை பொருத்தவரையில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலைகளில் ஓரிரு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றங்கள் என்றால் அவை சரியாக கணக்கிட்டு கூறப்படுமேயானால் 10 முதல் 30 பைசா வரையில் மட்டுமே ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறது.