இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் அமெரிக்கா!! அதிபர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

USA signs trade deal with India!!
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 2025 ல் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளில் இருந்து உலக நாடுகளின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தார் ட்ரம்ப். சீனாவுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தின் மூலமாக வர்த்தக மோதலை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான அதிக வரிகளை விதித்துள்ளார். இந்தியா- அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய போது வரிகளை தளர்த்த வேண்டும் என கூறி வருகிறது.
அவரது வரி அதிகரிப்பு இந்தியாவை மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் மீது வரிகளை விதித்தார். இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த தாக்குதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது என கூறி வந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் , அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியதால் பயங்கரவாத தாக்குதல் முடிவுக்கு வந்தது என பெருமை பேசி வந்தார் ட்ரம்ப். பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை ஏற்கவில்லை, இனியும் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், “ஏற்கனவே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது அமெரிக்கா. அனைத்து நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போவதில்லை. சிறந்த ஒப்பந்தங்கள் வர இந்தியாவுடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது” என கூறியுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram