விமானத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து!! ரத்து செய்யப்பட்ட யாத்திரை நிறுவனம்!!

விமானம் வெடித்து சிதறிய பதற்றமே அடங்காத நிலையில் அடுத்ததாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்டில் யாத்திரை நிறுவனமான ஆரியன் ஏவியேஷன் நிறுவனம் ஹெலிகாப்டர் மூலம் வாடிக்கையாளர்களை சுற்றி காட்டி வந்துள்ளது. இதற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ஏழு பேர் அடங்கிய குழு ஒன்றை குப்தாஷியிலிருந்து வாடிக்கையாளர்களை கேதார்நாத் தாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

இதில் குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலத்தைச் சார்ந்தவர்கள் யாத்திரைக்கு சென்றுள்ளனர். இக்குழுவில் ஒரு குழந்தையும் இருந்திருக்கிறது. தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் குப்தாஷிக்கு திரும்பும் நிலையில், வானியல் சூழ்நிலை காரணமாக ஹெலிகாப்டர் நிலை தவறி கவுரககுண்டு காடுகளில் வெடித்து சிதறி உள்ளது. குழந்தை உட்பட்ட ஏழு பேரும் இறந்து விட்டனர். இதை அறிந்த மீட்பு குழு அங்கு விரைந்து மலைக் காடுகளில் அவர்களின் உடலை தேடி மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. உத்தரகண்ட் முதல்வர் இது குறித்து வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு, அந்த யாத்திரை நிறுவனத்திற்கு ரத்து விதித்துள்ளது. மேலும் இரண்டு விமானங்களுக்கு ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஜூன் மாதம் தொடங்கியது முதலே அடுத்தடுத்து அரங்கேறும் பேரிடர் விபத்துக்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும், விமானத்தின் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்ற எண்ணத்தையும் கொடுத்து வருகின்றது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram