வாலி மிக அற்புதமான பாடல் வரிகளை அமைப்பவர். அவருக்கு வாலிப பாடகர் என்ற ஒரு மற்றொரு பெயர் உலா வருவதுண்டு. இவர் எழுதிய பாடல்களை கண்ணதாசன் தான் எழுதினாரா என்று சந்தேகிக்கும் வகையில் பாடல் வரிகள் அமையும். ஏகப்பட்ட நடிகர்களுக்கு பாடல் வரிகளை நேர்த்தியாக அமைத்துள்ளார். கண்ணதாசனுக்கு பிறகு திரை உலகில் தோன்றினாலும் கண்ணதாசனுக்கு ஈடாகவும், அவரை விட அதிகமாகவும் பாடலை இயக்கியுள்ளார். அது போல் எப்பேர்பட்ட நிலைமைக்கு சென்றாலும், ஒரு சிறு பாடகர் நன்றாக எழுதி இருந்தாலும் அவரை வாழ்த்த தயங்க மாட்டார்.
சொல்லப்போனால் வாலியின் போட்டியாளரே கண்ணதாசன் தான் என்று அவரே கூறி இருக்கிறார். அதேபோல் கண்ணதாசனுக்கு ஈடான பேர் புகழை சம்பாதித்தும் வைத்துள்ளார். வாலியின் அடுத்தடுத்த வெற்றி காரணமாக கண்ணதாசன் ஒரு பார்ட்டி வைத்துள்ளார். அந்த பாட்டையே மது இல்லையேல் மாது பார்ட்டி தான். அதில் கலந்து கொண்ட வாலி போதை தலைக்கேறி ஒரு அறையினுள் நுழைவதை கவனித்த கண்ணதாசனின் உதவியாளர் இது அவரை பழிவாங்க சரியான நேரம். இவரின் வளர்ச்சியை முறியடிக்க போலீசுக்கு ஒரு கால் செய்தால் போதும். இங்கு வந்து இவரின் பெயரை அழித்து விடுவார்கள் என்று கூற கண்ணதாசனுக்கு வந்தது கோபம். அதெல்லாம் செய்யக்கூடாது அவர் வெளியே வந்த பிறகு அவரை உரிய இடத்தில் போய் இறக்கிவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இது எப்படியோ வாலியின் காதுகளுக்கு செல்ல, உதவியாளரைப் பிடித்து கத்தி விட்டு, கண்ணதாசனை நினைத்து நெகழ்ச்சி அடைந்து உள்ளார். இந்தப் பதிவை அவரே அவருடைய நினைவு நாடாக்கள் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். உதவியாளரை என்னை நீ நினைக்கும் படி எல்லாம் வீழ்த்தி விட முடியாது என்று எச்சரித்துவிட்டு வந்துள்ளார். இதில் கண்ணதாசனின் மகத்துவ நட்புதான் உண்மையில் தெரிய வருகிறது என்று பலரும் தகவலை பதிவிட்டு வருகின்றனர்.