சென்னை: நடிகர் வடிவேலு மீது அவதூறு பரப்பியதற்காக நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்படி ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிங்கமுத்துவிற்கு 2500 ரூபாய் அபராதமாக விதித்தது. Youtube சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்துள்ளார்.
அதன்படி நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தன்னை அவதூறு பரப்பியதற்காக ஐந்து கோடியை மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், தன்னைப் பற்றி அவதூறு பேசியதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் வடிவேலுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று சிங்கமுத்து மனு தாக்கல் செய்தார்.
நடிகர் சிங்கமுத்து சார்பில் தெரிவிக்கப்பட்ட மனுவில் நடிகர் வடிவேலுவுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறான தகவல்களை வாய் மொழியாகவோ, எழுத்து பூர்வமாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலே வெளியிட மாட்டேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்து கண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்கால மனுவை முடித்து உத்தரவிட்டார்.
சிவில் வழக்கு விசாரணைத்த போது சிங்க முத்து சார்பில் ஆஜராகி பதில் தாக்கல் செய்யாத நிலையில் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று சிங்கமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் 67 வயதாகி விட்டதாகவும், உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வழக்கில் பதில் தாக்கல் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் சிங்கமுத்து. தடை உத்தரவை நீக்குமாறு சிங்கமுத்து தரப்புக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.