இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. இனி 79 ஆவது சுதந்திர தின விழாவின் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார்.
தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருந்ததாவது,
மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களே!!
தங்களின் விடுதலை திருநாள் பேருரைக்கு மக்கள்
கருத்துக்கு அழைப்பு விடுத்த தங்கள்
மாண்புக்கு என் ஜனநாயக வணக்கம்!
தமிழ்நாட்டில் இருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன்
தாங்கள் காலமெல்லாம் போற்றி வரும் திருக்குறள்
இனம், மொழி, மதம், நாடு கடந்து உலகத்தின்
அசைக்க முடியாத அறநூல் மனிதம் என்ற
ஒற்றைக் குறிக்கோளை உயர்த்தி பிடிப்பது,
அதனை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு மற்றும்
நிறைவேறாத கோரிக்கை!! இந்தியாவின் 79வது
விடுதலை திருநாள் பேருரையில் திருக்குறள் இந்தியாவின்
தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்று நல்ல அறிவிப்பை
வெளியிட வேண்டுகிறோம். தாங்கள் கேட்டுக் கொண்ட
வண்ணம் நமோ செயலிலும் இதனை பதிவிட இருக்கிறோம்.
இது உலக பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை
என கருதப்படும். ஆவன செய்ய வேண்டுகிறோம். ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம்.
என்று தனது வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.