சென்னை: பாடலாசிரியர் வாலியை இன்றளவிலும் யாராலும் மறக்க முடியாது. எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி வரை அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார். இளம் பாடலாசிரியர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர் 2013ல் உயிரிழந்தார். அவரை போலீசில் மாட்டி விட சதி நடந்தது. வாலி என்றாலே கோலிவுட்டில் தனி இடம் உண்டு. இப்பொழுதும் ரேடியோக்களில் அதிகமாக ஒலிப்பது வாலியின் பாடல்கள் மட்டுமே. அவரிடம் தமிழ் திறமை மிகுதியாக இருந்ததால் சில பாடல்களிலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாலி.
கண்ணதாசன் கொடி தான் கோடம்பாக்கத்தில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தது. மற்ற பாடல் ஆசிரியர்கள் திணறுகையில் வாலி மட்டும் அசால்டாக போட்டி போட்டு தனி அடையாளத்தை உருவாக்கினார். அவர் எழுதும் பாடலில் தமிழ் புலமை, தனக்கென ஸ்டைல் போன்றவற்றை பயன்படுத்தி கண்ணதாசனுக்கு போட்டியாக பார்க்கப்பட்டது.
அவரின் மறைவுக்குப் பிறகு வாலி மற்றும் வைரமுத்துக்கு இடையே போட்டி உருவானது. எத்தனையோ கலைஞர்கள் உருவாகலாம், கவிதைகள் எழுதலாம். ஆனால் அவருக்கென தனித்துவத்தையும், தமிழ் புலமையையும் பயன்படுத்தி அவருக்கு ஈடாக யாராலும் திகழ முடியாது. ஒரு பாடலின் வாய்ப்பு கிடைத்தால் தனது திறமைகளை காட்டத்தான் அனைத்து பாடலாசிரியர்களும் நினைப்பார்கள்.
ஆனால், வாலியோ கதைக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எளிமையான வார்த்தைகளைக் கொண்டு பாடல்களை எழுதும் வல்லமை பெற்றிருந்தார். இளைய பாடல் ஆசிரியர்களை பாராட்டுவதற்காக எந்தவித சஞ்சலமும் வைத்ததில்லை வாலி அவர்கள். கண்ணதாசன் தரப்பில் ஒரு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் போதையில் ஒரு அறைக்குள் சென்றார் வாலி.
கண்ணதாசனின் உதவியாளர் “இதுதான் சரியான சமயம் போலீசில் தகவல் கொடுத்தால் வாலியின் மார்க்கெட் குறையும் வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும்”என்றும் கூறியுள்ளார். ஆனால், கண்ணதாசன் இதையெல்லாம் செய்யக்கூடாது என்றும், அவர் எப்போது வெளியே வருகிறாரோ, அப்போது காரில் அழைத்து கொண்டு வீட்டில் விட்டு வா என்றும் சொல்லி இருக்கிறார். இந்த செய்தி கேட்டு வாலியோ கண்ணதாசனை நினைத்து நெகிழ்ந்து உள்ளாராம். இதனை வாலி நினைவு நாடாக்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பெருமைக்குரியது.





