வேல்ஸ் பிலிம்ஸின் பத்து பட கமிட்மெண்ட்ஸ்!! அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!!

வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு பெரிய அசோஷியேஷன். இது பல முக்கிய டைரக்டர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தது. மேலும், இந்நிறுவனத்தில் பல முக்கிய மாற்றங்கள் இடையில் மிகப் பிரபலமாக நடைபெற்று இருந்தது. அதில் தலைமை அதிகாரி சீனிவாசன் ராஜகோபால் ராஜினாமா செய்திருந்தார். அதைத்தொடர்ந்து அது பங்குதாரர் நிலையிலும் அதிக மாற்றம் நடைபெற்று இருந்தது. தற்சமயம் இந்த பட தயாரிப்பாளர் குழு தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி 56 திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும், அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட்ஸ் கான பங்குகளையும் தயாரிப்புக் குழு பட குழுவிடம் ஒப்படைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அது அடுத்தடுத்த பத்து படங்களின் இயக்குனர்களையும் முடிவு செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது. அவற்றின் லிஸ்ட்கள் பின்வருமாறு, மாரி செல்வராஜ், சுந்தர் சி, வெற்றிமாறன், பிரேம்குமார், கௌதம் மேனன், செல்லா அய்யாவு, ஜூட் ஆண்டனி ஜோசப், விக்னேஷ் ராஜா மற்றும் அருண் ராஜா காமராஜ் ஆகியோர் இயக்க இருக்கும் பத்து படங்களுக்கு கமிட்மெண்ட் கொடுத்துள்ளது வேல்ஸ் நிறுவனம். இது மட்டுமல்லாமல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜோலிவுட் என்கிற தீம் பார்க்கை உருவாக்கி வருகின்றது. கூடிய விரைவில் இந்த தீம் பார்க் மிகப் பிரமாண்டமாக ஓபன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ராஜினாமா கடிதத்தை தொடர்ந்து பத்து பட கமிட்மெண்ட்ஸ் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram