புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசிக்கும் உயர்நிலைத் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை சமூகவிரோதிகள் சிலரால் கலக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இல்லாமல் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஓராண்டுக்கு மேல் விசாரணை செய்யப்பட்ட நிலையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவில் வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் வெள்ளனூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஒரு வருடத்துக்கு மேலாக விசாரணை செய்ததில் அதே பகுதி சேர்ந்த மூன்று பெயர்களை குற்றம் சாட்டப்பட்ட நண்பர்களாக உறுதி செய்தது. இதன் பின் விசாரித்த புதுக்கோட்டை நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யநாராயணன் அதே கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழிவாங்க இந்த செயலை அந்த மூன்று பேரும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பு ஏற்படுத்தியதின் விளைவாக அந்த மூன்று பேரும் தலைமறைவாக இருந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் ஒரே சமூகத்தைச் சார்ந்த அவர்கள் இந்த சம்பவத்தை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தலைமறைவாக இருந்த ராஜா, சுதர்சன் மற்றும் முத்து கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் இன்று அவர்களுடைய வழக்கறிஞர்களுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.