கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த தி கோட் திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை கண்டிருந்தது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் சிறு கதாபாத்திரத்தில் இதில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தி கோட் 2 திரைப்படம் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் காம்போவில் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அவர் மிக பிஸியாக இருக்கிறார்.
வெங்கட் பிரபு தனக்கென்று திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்து வைத்துள்ளவர். கோவா, சரோஜா ஆகிய படங்களில் முன்னணி நடிகர்கள் இல்லாமல் படம் ஹிட் கொடுத்து தனித்துவமான பெயரை திரை உலகில் சம்பாதித்து வைத்துள்ளார். தி கோட் படத்தினால் அவருடைய மார்க்கெட் எகிறி உள்ளது. தி கோட் படத்திற்கு பிறகு அவர் ஆபீஸில் சும்மா தான் இருக்கிறார். இதனை அடுத்து வெங்கட் பிரபு செட்டை சேர்ந்த நடிகர் வைபவ் தி கோட் 2 படம் எடுக்க நாளாகும் என்பதால், அவரது அலுவலகத்தில் சரோஜா 2, கோவா 2 படம் எடுப்பதை குறித்து டிஸ்கஸ் செய்து வருகிறோம்.
பெரிய பட்ஜெட் இல்லாமல் கோவா படம் அப்பொழுது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததால், இதன் இரண்டாம் பாகம் குறித்து பெருமளவு பேச்சு அடிப்படுகின்றது. இந்த தகவல் வெளியாகியதிலிருந்து வெங்கட் பிரபு பட ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இதனை ஷேர் செய்து வருகின்றனர். தி கோட் படத்திற்கு பிறகு அவருடைய வெளியீட்டின் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.