வெற்றி இந்தியாவுக்கு தான் சாதகமாக உள்ளது!! இதற்கு விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!! தென் ஆப்பிரிக்க வீரர் சர்ச்சை கருத்து!!

Victory is in favor of India v

Cricket : தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றிக்கான சூழல் இந்திய அணிக்கு தான் அதிகமாக உள்ளது தென்னாப்பிரிக்க வீரர் கருத்து.

இந்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நாளை மறுநாள் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணிக்கு இந்த போட்டி தான் கடைசி லீக் போட்டி. மேலும் இந்த வெற்றிகரால் பல விமர்சனங்கள் இந்திய அணியின் மீது எழுந்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் இது குறித்து கூறும்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள அனைத்து அணிகளும் வெவ்வேறு  மைதானத்தில் விளையாடுகின்றன. அதனால் அதற்கேற்றவாறு வீரர்கள் பயிற்சி செய்து விளையாடி வேண்டிய கடினம் உள்ளது. ஆனால் இந்திய அணி அவ்வாறு இல்லாமல் ஒரே பிட்ச்சில் விளையாடுகிறது. அதனால் இந்திய அணி விளையாடுவதற்கு ஈசியாக இருக்கும் மற்ற அணிகளுக்கு கடினம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் பல கிரிக்கெட் ஊடகங்களும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வீரரான ராசி வாண்டர் சன் தற்போது இதே போன்ற கருத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் வெற்றிக்கான சூழல் இந்தியாவின் பக்கம் தான் உள்ளது. ஏனெனில் இந்திய அணி ஒரே இடத்தில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடி ஒரே பிட்ச்சில் பயிற்சி செய்து விளையாடுவது சாதகமான அம்சம் தான். இதை புரிந்து கொள்ளுங்கள். இதைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சூழலை பயன்படுத்தி வெற்றி பெறும் பொறுப்பு அவர்களுடையது என்று  கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram