தவெகவிற்கு பிரசாந்த் கிஷோர் உதவ காரணம் இதோ!! களம் இறங்க தயாராகிறது தவெக!!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்தே போட்டியிடுவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாத் கிஷோர் தகவலை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த இரண்டாம் ஆண்டு தொடக்க விழா முதல் கட்சி உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து பிரசாந்த் கிஷோர் தவெகவினர் கூடுதல் திறம்பட செயல்பட அறிவுரை கூறி வருகின்றார். தற்சமயம் நடந்த கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் விஜய் 2026 அரசியல் களம் காண தயாராக உள்ளார் என்று தகவல் பிரசாந்த் கிஷோரின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தலைவர் விஜய் ஒருபுறம் சினிமா, மற்றொருபுறம் அரசியல் நுணுக்கங்கள் குறித்த கவனம் ஆகியவற்றிலும் தொடர்ந்து தனது பணிகளை சிறக்க செயல்படுத்தி வருகிறார். மேலும் எந்த ஒரு தலைக்கணமும் இல்லாமல் தொடர்ந்து அவர் செயல்பட்டு வருகிறார். எதிர் வருகின்ற தேர்தலுக்கு இதுவரை கட்சியில் சேர்க்கப்பட்ட கட்சி நிபுணர்களுக்கும், மாவட்ட கட்சி முக்கிய தொண்டர்களுக்கும் தொடர்ந்து திறம்பட செயலாற்றுவது குறித்து அவ்வப்போது அந்த கட்சியின் சார்பில் தகவல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. மேலும், அந்தந்த மாவட்ட கட்சி உறுப்பினர்களும், மாவட்டத்தில் தவெக கட்சியினரை நிலை நாட்டுவது குறித்து தலைமையகத்துக்கு செய்திகள் தெரியப்படுத்தி வருவதாகவும் இருபுறமும் ஒத்துழைப்பாக அந்த கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் தேர்தலில் விஜய் ஏதேனும் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வாரா! என்று பல்வேறு மக்களிடம் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இவர் தனித்துப் போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், இப்பொழுது தவெக திறம்பட செயல்படுவதற்கு இவர் உதவ காரணம் வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் விஜய் இவருக்கு உதவுவார் என்ற எதிர்பார்ப்புடன் தான் என்ற தகவலும் கிடைத்துள்ளது. பீகாரில் நடிகரான விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்று அவர் பகிர்ந்துள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram