எல்லாம் உங்களுக்காகத்தான்.. சினிமாவுக்கு டாடா காட்டிய விஜய்!! ஜனநாயகன் மேடையில் ஒரு வரலாற்றுத் தருணம்!!

Vijay emotional speech Janayagan audio launch Fans

‘ஜனநாயகன்’ திரைப்படமே விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பது உறுதியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஒருவித சோகம் நிலவி வந்தது. இதனைப் போக்கும் விதமாகவும், தனது அரசியல் வருகையின் காரணத்தை விளக்கும் விதமாகவும் மேடையில் பேசிய விஜய், தனது ரசிகர்களுக்காகத் தான் எடுத்துள்ள மிகப்பெரிய தியாகம் குறித்து உருக்கமாகப் பேசினார்.

ரசிகர்களுக்காகச் சினிமா தியாகம்: மேடையில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய விஜய், “இத்தனை வருஷமா எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தவர்கள் என் ரசிகர்கள். எனக்காக நேரத்தை, உழைப்பை, ஏன் சில நேரங்களில் சொந்த வாழ்க்கையைக் கூட விட்டுக்கொடுத்து எனக்காக நின்றீர்கள். அப்படிப்பட்ட என் ரசிகர்களுக்காக, நான் நேசிக்கும் இந்தச் சினிமாவையே நான் விட்டுக்கொடுக்கிறேன்” என்று கூறினார்.

நன்றிக்கடன் தீர்க்கும் பயணம்: தொடர்ந்து பேசிய அவர், “இந்த விஜய் எப்போதுமே சும்மா ‘நன்றி’ என்று மட்டும் சொல்லிட்டுப் போறவன் கிடையாது. உங்களுக்கு நான் பட்டிருக்கிற நன்றிக்கடனைத் தீர்த்திட்டுப் போறவன் தான் இந்த விஜய். அந்த நன்றிக்கடனைத் தீர்க்கத்தான் நான் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்” எனத் தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.

ரசிகர்களின் கண்ணீர்: விஜய் “சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்” என்று சொன்ன அந்த நிமிடம், மைதானத்தில் இருந்த பல ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். ‘ஜனநாயகன்’ படம் ஒரு சாதாரணத் திரைப்படமாக இல்லாமல், விஜய்யின் சினிமா வாழ்க்கையின் ஒரு “பிரியாவிடை” (Farewell) பரிசாக அமையப்போகிறது என்பதை அவரது பேச்சு உணர்த்தியது.

வெறும் கைதட்டல்களுக்காகப் பேசாமல், தனது ரசிகர்களின் எதிர்காலத்திற்காகத் தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைத் துறக்கத் துணிந்த விஜய்யின் இந்த நேர்மை, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram