தவெக நிர்வாக கூட்டம் சென்னையில் நடைபெற்று உள்ளது. அதில் தவெக நிர்வாக தலைவர் புஷ்ஷி ஆனந்த் பங்கேற்கும் போது, முன்னாள் ராணுவ வீரர் தான் விவசாயி தனக்கு தமிழகத்தில் ஒரு அடி நிலம் கூட இல்லை என்று அனல் பறக்க வாதங்களை முன் வைத்துள்ளார். இதனால் நிர்வாக கூட்டமே பரபரப்பானது. முதலில் அவர் ஆனந்த அவர்களை வணங்கி விட்டு அவர் கையில் பூக்களை கொடுத்து உள்ளார். அவரது வயதை கூறி, 35 வருடங்களாக நான் ஓட்டு போட்டு வருகிறேன்.
35 வருடங்களாக டி எம் கே மற்றும் ஏ டி எம் கே ஆகிய கட்சியினருக்கு ஓட்டு போட்டு வருகிறேன். இத்தனை வருடங்களாக அவர்கள் தொடர்ந்து என்னை ஏமாற்றி வருகின்றனர். என்னை மட்டும் கிடையாது என்னை போல் விவசாயிகளை என்று கூறிய அவர், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர். விவசாயி குடும்பத்தைச் சார்ந்தவன். விவசாயி. எனக்கு நம் தமிழகத்தில் ஒரு அடி நிலம் கூட கிடையாது. இந்த ஏமாற்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றால், 2026 தேர்தலில் விஜய் முதல்வராக வேண்டும்.
முதல்வர் ஆவார் என்று மேடையில் அடித்துக் கூறி தவெக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டதாவது, தமிழகத்தின் தலையெழுத்து மாற வேண்டும் என்றால் தமிழகத்தின் அரசியலில் கட்டாயமாக ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே. இந்த வீடியோ ஆனது தற்சமயம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.





