TVK: இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் இந்தி திணிப்பு குறித்து பேசிய விஜய் அவர் கூறியதாவது, இப்ப புதுசா ஒரு பிரச்சனை உனக்கு அனுப்பி விட்டுருக்காங்க மும்மொழி கொள்கை இத வந்து இங்க செயல்படுத்தலான இந்த கல்விக்கான நிதியை வந்து நம்முடைய மாநில அரசுக்கு கொடுக்க மாட்டாங்களா இந்த LKG ,UKG பசங்க சண்டை போட்டுக்கோங்க தெரியுமா அந்த மாதிரி கொடுக்க வேண்டியது அவங்களுடைய கடமை . இங்க இவங்க வாங்க வேண்டியது இவர்களுடைய உரிமை ஆனா இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சீரியஸா ஒரு பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு இவங்க ரெண்டு பேரும் அதாங்க நம்ம பாசிசம் நம்ம பாயாசம் அதை நம்ம அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் இரண்டு பேரும் என்ன பண்றாங்கன்னா ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு இந்த செட்டிங் எல்லாம் பண்ணி வச்சுக்கிட்டு மாத்தி மாத்தி சோசியல் மீடியாவுல ஹேஷ்டேக் போட்டு விளையாடிட்டு இருக்காங்க.
இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு அதாவது இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சு பாக்கலாம் அது வந்து நாங்க நம்பிடுவோமா மக்கள் வாட் ப்ரோ இட் இஸ் வெரி ராங் ப்ரோ இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துரு டிவி கே பார் டி என் அப்படின்னு சொல்லி யாரு சார் நீங்க எங்க சார் இருக்கீங்க ஸ்லீப்பர் செல் மாதிரி அதனால இதெல்லாம் மக்களுக்கு நாம சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமே கிடையாது நம்ம ஊரு சுயமரியாதை ஊர் நாம் எல்லோரையும் மதிப்போம்.
ஆனா சுயமரியாதை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் தனிப்பட்ட முறையில் யார் வேணாலும் எந்த ஸ்கூல்ல வேணாலும் படிக்கலாம் உனக்கு எந்த மொழி வேண்டுமோ எப்ப கத்துக்கணும் மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழி கொள்கையை கல்விக் கொள்கையை கேள்விக்குறியாகி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிச்சா அது அரசியல் ரீதியாக திணிச்சா எப்படி ப்ரோ அதனால நம்முடைய தமிழக வெற்றி கழகம் சார்பாக நாமளும் இந்த பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இதை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம் நல்லது நடக்கும் வெற்றி நிச்சயம்.