திமுகவை குறித்து பேசும் விஜய்!! அதிமுக குறித்து பேசாதது ஏன்? எம் எல் ஏ செந்தில்குமார் விளக்கம்!!

Vijay talking about DMK

சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இப்போது பேசியவர், மிகப்பெரிய தலைவர்களையும் வென்ற இயக்கம் திமுக தான்.  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவை  குறித்து தான்  பேசுகிறார். அதிமுகவை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

திமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பிரதமர் மோடியை பற்றி பாசாங்கமாக பேசியுள்ளார். குறிப்பாக திமுக மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து மட்டும் பேசுகிறார். 505 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். இதில் 70 முதல் 80 சதவீதம் வரை கொடுத்த வாக்குறுதிகளின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கவலைப்படாத தேவையில்லை. தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் ஆட்சிக்கு வருவார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். அதை விஜய் பார்க்கத்தான் போகிறார். தமிழ்நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து விஜய்க்கு தெரியுமா? என்று கேள்விக்கு பதில் அளித்தவர், 2011 முதல் 2021 வரை ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கஜானாவை சுரண்டி வைத்துள்ளனர். மின்சார வாரியத்தில் மட்டும் ரூ. 1.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

பசுமை தீர்ப்பாயத்தில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழக அரசு பெற்றுள்ளது. மருத்துவம் மற்றும் கல்வியில் முக்கியத்துவம் செலுத்துவேன் என விஜய் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு வராத பள்ளிக் கட்டிடங்களை 7000 கோடி செலவில் புதிய கட்டிடங்களை கட்டியுள்ளோம்.

இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளது. “மக்களை தேடி மருத்துவத் திட்டம்” என சுகாதாரத்துறை நேரடியாக வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு ஐ நா விருது வழங்கியுள்ளது. “மடிக்கணினி மற்றும் குடிமராமத்து பணிகள்” நிறுத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதனை நாங்கள் மறுக்கவில்லை சில இடங்களில் வெற்றி பெற்றாலும் இந்த திட்டம் மக்களை சென்றடையவில்லை.

20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் வழங்கப்பட உள்ளது. “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” என்ற திட்டத்தில் ஒவ்வொரு முகாமிலும் இருந்து சுமார் 1200 மனுக்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் இருந்தாலும் சரி ஆட்சியில் இருக்கக்கூடிய உறுப்பினர்களாக இருந்தாலும் சரி சுமையை சுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் மக்களுக்காக மட்டுமே என்று கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram