விளாத்திகுளம் அருகே பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக 2020ஆம் ஆண்டு 60 வயதான பெண்ணை தாக்கி பாலியல் துன்புறுத்தி கொள்ளையடித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இவர், 2024 டிசம்பரில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவுடன் பைக் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் மீண்டும் ஈடுபட்டுள்ளார்.
மார்ச் மாதம் தொடக்கம் வேடநத்தம் காட்டுப்பகுதியில் தினமும் சுற்றித்திரிந்து, பெண்களை குறிவைத்து பதுங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மார்ச் 10ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் தனியாக சென்ற மாணவியை தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, ஒரு தனிநபர் யதார்த்தமாக எடுத்த பைக் புகைப்படம் போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது. அதனை அடிப்படையாக கொண்டு சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிறகும், குற்றவாளி வழக்கமானபடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு போலீசாரை ஏமாற்றி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றவர்களின் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடநத்தம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவியின் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. மேலும் பல மர்மங்கள் விரைவில் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


