பொதுவாக அரசுப்பணிக்காக வெளியிடும் வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் கிராமப்புற உதயகியாளர் பணி( village assistant). இதற்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இதற்கான வேலைகள் அந்த கிராமம் குறித்த முன்னேற்றம் மற்றும் சுத்த பணியாளர்கள் நியமிப்பு ஆகியவை இதில் அடங்கும். இதற்கான வயது வரம்பு நடப்பு ஆண்டு கணக்கின்படி 21 முதல் 32 வயது வரை இருக்கலாம். தாழ்த்தப்பட்ட பிரிவினராக இருந்தால் 37 முதல் 42 வயது வரை பிரிவிற்கு தகுந்தாற் போல் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு முறை எழுத்து முறை படி தேர்ச்சி பெற்று விட்டால் அடுத்ததாக நேரடி இண்டர்வியூ மற்றும் சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் ஆகியவை பின்பற்றப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கட்டணம் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சம்பளத் தகுதி 11,100 முதல் 35,100 வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 5 வரை இதற்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான தேர்வு அக்டோபர் ஐந்தாம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நேர்காணல் ஒதுக்கிடப்பட்டுள்ளது. அரசு வேலை என்றாலே பென்ஷன் ஊக்கத்தொகை ஆகியவை இருக்கும். இதன் காரணமாகவே லைஃப் செட்டில்மெண்ட் ஒர்க் என்று பலர் இதற்கு அப்ளை செய்து வருகின்றனர். மேலும் இந்த கிராம உதவியாளர்களுக்கு அரசாங்கத்தின் அவ்வப்போது போடப்படும் சலுகைகள் மற்றும் அப்டேட்களை கிராமப்புற மக்களுக்கு இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.